Friday, March 16, 2012

“கல்”




அடர்ந்து விரிந்து கிடக்கிறது அந்த ஆரண்யம். விண்ணை  எட்டும் தேவதாருக்கள், விளையாடும்  விலங்கினங்கள், பட்சிகள், அந்திச்சூரியனின் ஒளிக்கரங்கள் எட்டாமல் இருண்டிருக்கும் வனப்பாதை. கூடைடயும் புள்ளினங்களின் கும்மாளக் கூச்சல். அந்த வனப் பாதையில் சருகுகள் கூட சப்திக்காத தளர்ந்த நடையுடன் இரண்டு ஜோடிக்கால்கள் அலைந்து கொண்டிருக்கின்றன.

அந்த கால்களுக்குச் சொந்தக்காரர்களில் ஒருவன் கரியவன், ஆனால் வசீகரன். மற்றவன் சற்று இளையவன், பேரழகன். இருவரின் முகத்திலும் இறுக்கமான ஒரு மௌனம். மரவுரி தரித்து வில்லேந்தி வரும் இவர்கள் வேடுவர்களாய் இருப்பார்கேளா? இல்லை  .... இல்லை.... வேடுவர் முகத்தில் பொலியும்  நிர்மலம் இவர்க்கில்லை. இவர் முகம் குலத்தால் பொலிந்திருந்தலும் , குழப்பத்தாலும், அச்சத்தாலும் இருண்டிருக்கிறது. வேடுவர் முகத்தில் என்றும் குழப்பங்கள் தெரிவதில்ைல. இவர்கள் முகத்தில் எதையோ தொலைத்து விட்ட துக்கம் தெரிகிறது, தொலைத்த அந்தப் பொருள் அவர்களின் புன்னைகயாய் இருக்கலாம்.

இருவரும் ஒரு நதியின் கரையை சமீபித்துவிட்டார்கள். அந்த நதியின் படுகை  எங்கும் கற்கள்... கற்கள்... கற்களின் நடுவில் அந்த நதி ஒரு ஓடையாய் ஒழுகிச் செல்கிறது. பெருமழைக்காலத்தில் இந்த நதி அகண்டு விரிந்து ஆர்ப்பரிக்கும் என்பதை பறைசாற்றும் கற்கள். சற்றுத் தொலைவில் ஒரு பர்ணாசிரமம் இருந்து அழிந்து போன தடயங்கள். மனிதர்கள் வாழ்ந்து சென்ற  சுவடுகள். இடிந்து கிடக்கும் மண் சுவர்கள், எரிந்து போன ஹோமகுண்டங்கள், மழை  அழித்தது போக மறைய மறுத்து பிடிவாதமாய் ஒட்டியிருக்கும் மனிதப் பிரயர்த்தனங்கள்.

இருள் கவியத்துவங்குகிறது. இன்றைய  இரைவக் கழிக்க இது ஏதுவான இடம் என்பைத இளையவன் கூறாமேலேய கரியவன் கண்களால் ஆமோதிக்கிறான். இருவர் இடையிலும் சம்பாஷைணகள் கூட அருகிவிட்டது. இளையவன் துரிதமாய் இயங்கி நாணல் புற்களைக்கொண்டு இரு படுக்கைகளச் சமைக்கிறான்.

நிசியுடன் விளையாடும் சந்திரன் தன் உடல் குறுக்கி ஒளி கூட்டிக் களிக்கிறான். கரியவன் உறக்கம் வராமல் தவிக்கிறான். அவன் உடலும் மனமும் அவன் வசமில்லை. உடல் நெருப்பாய் தகித்துக் கொண்டிருக்கிறது. அருகில் உறங்கும் இளையவைனப் பார்க்கிறான். அவன் களைப்பின் மிகுதியில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறான்.

கரியவன் மெல்ல தன் படுக்கையை  விட்டு எழுகிறான். ஆற்றுப்படுகை சந்திர வெள்ளத்தில் திளைத்திருக்கிறது. அங்கு கரியவன் ஒரு விநோதத்தைக் காண்கிறான். ஆற்றுப்படுகையில் சில கற்கள் மட்டும் ஒளிர்ந்து கொண்டிருக்கின்றன. அவை  சந்திரகாந்தியை தம்முள் ஈர்த்து தணலைப்போல் ஒளிவீசுகின்றன. இவை  ஸ்படிகக் கற்களாய் இருக்குமோ  என்று ஐயம் கொள்கிறான் கரியவன். தன் அருகில் ஒளி வீசும் ஒரு பாறைய தெரிந்தெடுத்து அதன் மேல் அமர்கிறான். காமாக்னி அவன் உடலை  உலைக் கனலாய் எரிக்கிறது.


கரியவன் இளையவனின் முகத்தை உற்றுப் பார்க்கிறான். சலனமில்லா முகத்துடன் உறங்கிக் கொண்டிருக்கிறான் இளையவன். கரியவன் மனதில் ஓர் உண்மை துலங்குகிறது. இவன் துணைவிக்கு தான் செய்த துரோகம்தான் தன்னை  விதிரதம் ஏறி விரட்டி வருகிறெதென்பதறிகிறான். கருதிய உண்மை  கருந்தேள் விடமாய் கடுக்கிறது!

தீண்டும் தென்றல் கூட காமத்தீயை  திரியில்லாமல் தூண்டுகிறது. பாறையின் மீது படுக்கிறான். உடல் வெப்பத்தை பாறை உள்வாங்குவதாய் உணர்கிறான். அப்பொழுது  சருகுகள் முறியும் சப்தம் கேட்கிறது. உஷ்ணமூச்சின் ஒலியும் கிளம்புகிறது. பதைத்துத்திரும்பி ஓசை  வந்தவிடம் பார்க்கிறான் கரியவன். அங்கு இரு சர்ப்பங்கள் உடைல ஒன்றோடொன்று பின்னிப்பினைந்தபடி நிலெவாளியில் கூடிக்களிக்கின்றன. அந்த வேகம்,தாபம், கோபம்,காமம் கரியவனின் கண்களிலும் ஒளிர்கிறது. பார்வையை அங்கிருந்து பிடுங்கி எடுக்கிறான். நிலவின் காந்தியில் கண்கள் கூச திரும்பிப் படுக்கிறான். உடலின் வெப்பம் பாறையில் இறங்குவதை  மீண்டும் உணர்கிறான். கண்கள் மூடி உறங்க எத்தனிக்கிறான்.

உடலின் ெவப்பத்தை உள்வாங்கிப் பாறை குழையவாரம்பிக்கிறது. அது மிருதுவாய்க் குழைந்து ஒரு பெண் உடலாய் மாறுகிறது. அந்த உடல் கரியவனை ஆவேச ஆலிங்கனம் செய்து கொள்கிறது. அவன் காய்ந்த உதடுகைளக் கவ்விச்சுவைக்கிறது. பின் அதரம் விட்டு அங்கமெல்லாம் மேய்ந்து முத்துகிறது. அதன் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் தவளுகிறான் கரியவன். பாறையின் பாய்ச்சல் தொடர்கிறது . பல நுறு யுகங்களாய் பதுக்கி வைத்த காமம் பால்மழையாய் பொழிகிறது . லிங்கத்தின் தலையிலிருந்து கங்கையாய் வழிகிறது சுக்லம்.

உடலும் மனமும் குளிர்ந்து கிடக்கிறான் கரியவன். உடலின் வெப்பம்  பாறைக்குள் இறங்கி மிதமான வெந்நீர் சுகத்தில் விளைந்து கிடந்த கரியவன் மெதுவாய் கண்விழிக்கிறான். ஒரு பெண்ணுடல் தன்னை ஆலிங்கனம் செய்து கிடப்பைத அறிகிறான். பதறி எழுகிறான். பயத்துடன் திரும்பி இளையவனைப் பார்க்கிறான். அவன் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறான். திரும்பி மீண்டும் அந்தப் பெண்ணைப் பார்க்கிறான். அவள் ஒய்யாரமாய் படுத்தபடி இருகையுயர்த்தி அவனை மீண்டும் கலவிக்கு அழைக்கிறாள்.

கரியவன் பெருஙங்குழப்பத்துடன் அவளை நோக்கி , “யார் நீ? எப்படி இங்கு வந்தாய்?” என்றான்.

அவள் அழகாய்ச் சிரித்தபடி, “நான் இங்குதான் பல யுகங்களாய் கிடக்கிறேன் . இன்று நீதான் இங்கு வந்தாய்”. என்றாள்.

கரியவன் அப்பொழுதுதான் அதை கவனத்தில் கொள்கிறான். அவன் சயனித்திருந்த பாறை அங்கு இல்லை.

“ இங்கு இருந்த அந்தக் கல்....”

“அது நான்தான் இன்று உன்னால் மீண்டும் பெண்ணானேன் ”.

“அது மாயை .... ஒரு கொடுங்கனவு .... அது கலைந்துவிட்டது. நீ அந்தக் கனவின் பிரதிநிதி, நீ என் இன்னும் கலையவில்லை?”.

“எது கனவு?” அவள் ஏளனமாய்ச் சிரிக்கிறாள், “ உன் உடையிலும் என் உடலிலும் உறைந்திருக்கும் சுக்லமுமா கனவு?”

கரியவன் குற்ற உணர்வில் கூசிப்போகிறான். அவள் கண்கைளத் தவிர்த்து கவைலயுடன் கேட்கிறான் , “இது எப்படி நிகழ்ந்தது யார் இதன் கர்த்தா?”

“நீதான்.... இது உன்னால்தான் நிச்சயிக்கப் பட்டது, இன்று நாள் குறித்து நடந்தும் முடிந்து விட்டது. நான் ஒரு கல் என்னால் எது முடியும்?”.

கரியவன் குரல் கிசுகிசுப்பாய் வருகிறது, “ ஆம்... நீ ஒரு கல்தான், குற்ற உணர்வின்றி சிரிக்கின்றாயே”.

அவள் மீண்டும் அழகாய்ச் சிரிக்கிறாள், “இதில் என் குற்றம் என்ன இருக்கிறது? நீயாக என் இடம் தேடி வந்தாய், தூண்டினாய், துய்த்தாய், இப்பொழுது குற்ற உணர்வில் துடிக்கிறாய். இது ஆடவர் இயல்பு போலும் . என்னை முன்னொருமுறை கள்ளத்தனமாய் சுகித்தவனும் கல்லெறிந்த நாய்போல் ஓடிமைறந்தான், நான் கல்லாய் சபிக்கப்பட்டேன் ”.

“உன்னைக் கல்லாய் சபித்தது யார்?”

“என் கணவன்”

கரியவன் முகத்தில் குற்ற உணர்வு கூடுகிறது, “ ஐயோ .... கொடுங்குற்றம் புரிந்தேனே , இதற்க்கு எங்கு சென்று பரிகாரம் தேடுவேன் ?”

“ எது குற்றம்? பெண்ணைக் கல்லாக்கியதா? கல்லைப் பெண்ணாக்கியதா?”.

"பிறன்மனை விளைவது பெருங்குற்றம்”.

“குற்றமாம் குற்றம்” என்றபடி அவள் சீறி எழுந்தாள். அவள் கண்களைக் கண்ட கரியவன் பயந்து போனான்.

“பிறன்மனை விளைவது பெருங்குற்றெமன்றால் தன் மனை தவிர்த்தல் குற்றமில்லையா? அதோ அங்கு அழிந்து கிடக்கும் பர்ணாசிரமத்தைப் பார், அது எப்படி அழிந்தது தெரியுமா ? ஒவ்வொரு முறையும் யாக குண்டத்தில் தீ மூட்டும் போதும் வளர்ந்து எரிந்தது யாகத்தீ மட்டுமா? இதோ இங்கு கல்லாய் சமைந்து கிடக்கிறார்கேள என் தோழிகள், அவர்களின் காமாக்னியும்தான்”.

இப்பொழுது இரவில் ஒளிரும் அந்தக் கற்கள் கரியவனுக்கு அச்சமுட்டுவதாக இருக்கிறது. அவன் உடல் நடுங்குகிறது, அவன் நடுங்கும் குரலில், “ நீ என்னை வஞ்சித்து விட்டாய். நான் உன்னை மீண்டும் கல்லாய் சபிப்பேன்.” என்றான்.

அவன் அப்படிச் சொன்னதும் அவள் சிரித்த சிரிப்பு எட்டுத்திக்கையும் அசைத்தது, “ கல்லாய் சபிப்பாராம்... கல்லாய் சமைவதொன்றும் எங்களுக்கு கஷ்ட்டமில்லை. கட்டியவன் கருத்தொற்ப, கல் என்றால் கல் என்றும், கனி என்றால் கனிஎன்றும் கலந்த வாழ்க்கை தானே எம் வாழ்க்கை. தர்மமும் நீர் உரைப்பீர், தவறிடவும் வழிவகுப்பீர், பின் தாரெமன்றும் பாராமல் தருவாய், கல்லாய் சபித்திடுவீர். இதற்க்கொன்றும் அஞ்சியல்ல எங்கள் இனம் நீவிர் இட்ட பணி தவறாமல் செய்வதெல்லாம் . இன்பம் வழங்குதல் எங்கள் குணம். இரந்தவர்க்கு ஈவது எங்கள் மனம். காமதேனுவைக் கட்டி வைத்து கறப்பதன்றோ  உங்கள் குணம். உன் கால் பட்டு சாபம் நீங்கி எழுந்தவள் அல்ல நான். உன் காமம் தீர்க்க உன்பால் குழைந்தவள். நான் உனக்குச் செய்த உபகாரம் அறியாமல் உளறுகிறாய். உன் இச்சைக்கான ஔடதமாய் வந்த என்னைக் கொச்சைப் படுத்திவிட்டாய். பிடி சாபம்... இந்த குற்ற உணர்வே உன்னுள் விருட்சமாய் வளரும். நீயும் உன் மனைவியை சந்தேகிப்பாய், உன் இல்வாழ்க்கை இன்றுடன் முடிந்ததென்று கொள் . உன் இறுதி நாட்களில் நீ தனிமையில் வீழ்வாய். நீ பெற்ற புகழைனத்தும் இழந்து புலம்புவாய்.”

பாபாசரண்
09 06 2010

No comments:

Post a Comment